Published : 03,Jan 2023 07:13 PM

கேட்சா? சிக்சரா? சர்ச்சை ஓய்வதற்குள் ரன்அவுட்டா? இல்லையா? சர்ச்சை!-தொடரும் பிபிஎல் கலாட்டா

before--a-catch--or-A-six--Controversy--now-its-a-runout--or-notout-Controversy-BBL-funny-moments

கடைசி நேர பரபரப்பு, இரட்டை சூப்பர் ஓவர் என ஐபிஎல் தொடர் பல சுவாரசியமான ஆட்டங்களை கொடுத்துள்ளது. தற்போது அதற்கு இணையாக பல சர்ச்சைக்குறிய கலாட்டாக்களை கண்டுவருகிறது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிபிஎல் தொடர்.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 தொடரான பிக்பேஸ் லீக் தொடர் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் போட்டி தொடங்கப்பட்டதிலிருந்து பல சர்ச்சைக்குறிய விசயங்களை கண்டுவருகிறது பிபிஎல். இந்த தொடரில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட், கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ், சிட்னி தண்டர்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

பவுண்டரி லைனுக்கு வெளியில் பிடிக்கப்பட்டது அவுட்டா? நாட் அவுட்டா? சர்ச்சை!

முன்னதாக பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதிய போட்டியில், போட்டியின் முக்கியமான நேரத்தில் பிடிக்கப்பட்ட கேட்ச் சர்ச்சைகுரியதாக மாறியது. 225 ரன்களை இலக்காக துரத்திய சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் ஜோர்டான் சில்க் இறுதிவரை களத்தில் நின்று வெற்றிக்கான அந்த பக்கமா இந்த பக்கமா என்ற கோட்டில் வைத்திருந்தார் போட்டியை.

image

இந்நிலையில் 19 ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய ஜோர்டன், இரண்டாவது பந்தையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். பந்தும் கிட்டத்தட்ட எல்லைக் கோட்டிற்கு வெளியே சென்று விட்டது. எல்லைக் கோட்டில் நின்று கொண்டிருந்த நெஸர் அங்கே ஒரு மேஜிக்கை நிகழ்த்தினார். பறந்து பந்தை பிடித்த அவர் பேலன்ஸ் இல்லாமல் எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்றுவிட்டார். ஆனால், பந்தினை மேலே தூக்கி வீசி காற்றிலேயே வைத்திருந்த அவர், எல்லைக்கோட்டிற்கு வெளியே இருந்து பந்தை தரையில் கால் படாமல் அந்தரத்தில் தாவிபிடித்து மீண்டும் பந்தினை கோட்டிற்கு உள்ளே வீசி, மைதானத்திற்குள் ஓடி வந்து லாவகமாக பிடித்து அவுட் என கத்திக்கொண்டே ஓடிவந்தார்.

image

அது அவுட்டா சிக்சரா என்ற குழப்பம் பார்த்த ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், நடுவர்களுக்கும் பெரிய குழப்பமாக இருந்தது. நீண்ட நேரம் இதனை மூன்றாம் நடுவர்கள் சோதனையிட்ட பிறகு அவுட் கொடுத்தனர். இருப்பினும் இது அவுட்டா? அவுட் இல்லையா என சமூக வலைதளங்களில் விவாதம் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

OUT or NOT OUT? pic.twitter.com/evxLhL2hAv

— England's Barmy Army (@TheBarmyArmy) January 1, 2023

இந்நிலையில் இன்று நடைபெற்ற மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆடம் ஷாம்பாவால், செய்யப்பட்ட மன்கட் ரன் அவுட் மீண்டுமொரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரன் அவுட்டா? இல்லையா? சர்ச்சை!

image

போட்டியில் 20ஆவது ஓவரில் 5ஆவது பந்தை வீச வந்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் ஆடம் ஷாம்பா, நான் ஸ்டிரைக்கில் நின்றிருந்த ரொகர்ஸ் என்ற வீரரை மான்கட் முறையில் ரன் அவுட் செய்தார். பேட்ஸ்மேனும் அவுட்டாகி விட்டதாக பெவிலியன் செல்ல முயன்றார்.

image

ஆனால் என்ன முடிவு எடுப்பதென்று தெரியாமல் திணறிய அம்பயர், மூன்றாவது அம்பயருடன் உரையாடல் செய்தபிறகு ஆடம் ஷாம்பா பந்துவீசுவதற்காக கையை முழுமையாக கோட்டை தாண்டி சுழற்றிவிட்டதால் அது நாட் அவுட் என்று அறிவிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆக்ரோசமாக சத்தம் போட்டுக்கொண்டு இருந்தனர். பிறகு, ரன் அவுட் இல்லை என்று உறுதியாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த முடிவும் சர்ச்சைக்குறிய ஒன்றாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பேட்டர் முழுவதுமாக கோட்டிற்கு வெளியாக சென்றுவிட்ட போது, இந்த முடிவு எப்படி சரியானதாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்