Published : 03,Jan 2023 06:11 PM

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் பும்ரா!

Bumrah-returned-to-the-Indian-team-

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ராவும் ஒருவர். இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே கடந்த செப்டம்பர் மாதம் டி20 தொடர் நடைபெற்றது. அதில் இடம்பெற்றிருந்த அவருக்கு, பயிற்சியின்போது முதுகில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து, அவர் முதல் போட்டியில் விளையாடவில்லை. காயத்தால் அவர் அவதிப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொடரிலிருந்தும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்தும் முழுவதுமாக விலகினார்.

இவர், விலகியது இந்திய அணிக்கு பின்னடைவானது. இந்தத் தொடரில் பும்ராவுக்குப் பதில் மாற்று வீரர்களைக் களமிறக்கி இந்திய அணி விளையாண்டாலும், டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோற்று வெளியேறியது.

image

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக காயத்தால் விளையாடாமல் ஓய்வில் இருந்து வந்த பும்ரா, தற்போது வரும் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியுடன் முதற்கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்குப் பிறகு இவ்விரு அணிகளுக்கான ஒருநாள் தொடரில் வரும் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அவரும் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், அவர் 100 சதவிகித உடற்தகுதியை எட்டிவிடுவார் என பிசிசிஐ கருதுகிறது.

image

ரோஹித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட அணியில் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களும் இடம்பிடித்து உள்ளனர்.

பும்ரா கடைசியாக ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அந்த தொடரில் அவர் முதல்முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்