மத்திய அரசின் முயற்சியைப் பின்பற்றி தமிழக சட்டப்பேரவையும் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.
காகிதப் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில், இ-விதான் திட்டத்தை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் முயற்சியைப் பின்பற்றி தமிழக சட்டப்பேரவையில் முதல் கட்டமாக தணிக்கை அறிக்கைகள், அரசுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் காகித வடிவில் இல்லாமல் மின்னணு வடிவிலேயே தாக்கல் செய்யப்படவுள்ளன. ஜனவரி மாதத்தில் இதற்கான முதல்கட்டப் பணிகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் அரசு ஆவணங்கள், அறிக்கைகளில் காகிதப் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில், இ-விதான் திட்டத்தை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அது நிறைவடைந்ததும், மக்களவை, மாநிலங்களவையின் அனைத்து ஆவணங்களும், அறிக்கைகளும் மின்னணு வடிவில் மட்டுமே இருக்கும். அதேபோல, சட்டப்பேரவைகளிலும் மின்னணு ஆவணக் கையாளல் அமலுக்கு வரவுள்ளது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!