தூய்மையே சேவை திட்டத்தின் கீழ், மும்பையில் உள்ள சில தெருக்களை நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் சுத்தம் செய்தார்.
பிரதமர் அழைப்பு விடுத்துள்ள தூய்மையே சேவை பரப்புரையில், இந்தியாவின் பிரபலங்கள் பலரும் இணைந்து வருகின்றனர். இதில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் அனில் அம்பானியின் மனைவி நீதா, நடிகர் அக்ஷய் குமார், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் தூய்மையே சேவை பரப்புரையின் ஒரு பகுதியாக, தூய்மை மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்திற்கு சமீபத்தில் ஆதரவு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், தூய்மையே கடவுள் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மும்பையில் உள்ள சில தெருக்களை இன்று அதிகாலை சச்சின் டெண்டுல்கர் சுத்தம் செய்தார். அத்துடன் சுத்தம் செய்து குவித்த குப்பைகளை சேகரித்து அவர் அப்புறப்படுத்தினார். பகல் நேரங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், அதிகாலை நேரத்தில் சச்சின் தூய்மை சேவையில் ஈடுபட்டார்.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்