Published : 02,Jan 2023 03:23 PM
சங்கிலியில் கைவிலங்கிட்டு அழைத்துச்செல்லப்பட்ட இந்திய மீனவர்கள்... இலங்கையில் அதிர்ச்சி!

சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை கைவிலங்கிட்டு நீதிமன்றம் அழைத்து வந்ததற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களை இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இலங்கை யாழ்ப்பாணம் சிறைத்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது மீனவர்களை ஒரே சங்கிலியில் அடுத்தடுத்து கையில் விலங்கிட்டு காவல்துறையினர் அழைத்து வந்தனர்.
இதற்கு தமிழக மீனவர்கள் மற்றும் மீனவ சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.