[X] Close

3 நாட்களுக்கு மழை தொடரும்!

Rain-will-continue

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தெற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால் மேகக் கூட்டங்கள் அதிக அளவில் உருவாகி தமிழகம், ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகின்றன. இதையடுத்து, வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், சில உள்மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close