Published : 01,Jan 2023 08:25 PM

பெண்களுடன் செல்ஃபி எடுக்க முயன்றதால் கைகலப்பு - மோதலில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்

Fight-erupts-after-men-force-women-for-selfies-at-new-year-party-in-UP-society-video-out

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் நேரிட்டது.

டெல்லி - உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது சில ஆண்கள் வலுக்கட்டாயமாக இரண்டு பெண்களுடன் செல்ஃபி எடுக்க முற்பட்டுள்ளனர். இதற்கு அப்பெண்களின் கணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் வாக்குவாதம் மூண்டு, கைகலப்பில் முடிந்துள்ளது.

இதில் குடியிருப்பில் வசிப்போர் மற்றும் பாதுகாவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறை, 2 பேரைக் கைது செய்து விசாரித்து வருகிறது.



தவற விடாதீர்: “என் மகனிடம் சொல்லிடாதீங்க”.. போலி ஐடி கார்டுடன் மும்பை ஏர்போர்ட்டில் சிக்கிய தொழிலதிபர்!


சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்