Published : 28,Dec 2022 04:12 PM

ஜிவா தோனிக்கு மெஸ்ஸி அனுப்பிய ஜெர்சி! தரமான கேப்ஷனுடன் பதிவிடப்பட்ட போட்டோ!

Jersey-sent-by-Messi-to-Dhoni-s-daughter-Ziva--A-photo-posted-with-great-news-

எம்எஸ் தோனியின் மகள் லியோனல் மெஸ்ஸியின் கையொப்பமிடப்பட்ட அர்ஜென்டினா ஜெர்சியை மனதைக் கவரும் இரண்டு வார்த்தை செய்தியுடன் பெற்றிருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எம்எஸ் தோனியின் மகள் ஜிவா, லியோனல் மெஸ்ஸியின் கையெழுத்திட்ட அர்ஜென்டினா ஜெர்சியை அணிந்திருந்தார். அதில் கால்பந்தாட்ட ஜாம்பவான் எழுதிய இரண்டு வார்த்தைகள் இருந்தன. தற்போது ஜிவா தோனியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் அது பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் இணைத்திருக்கும் அற்புதமான கேப்ஷனும் சேர்ந்து தற்போது வைரலாகி வருகிறது.

image

டிசம்பர் 18 அன்று கத்தாரின் லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி, அர்ஜென்டினா FIFA உலகக் கோப்பை பட்டத்தை 3ஆவது முறையாக வென்றது. 120 நிமிடங்கள் வரை வாழ்வா சாவா என நீடித்த அந்த போட்டியில் இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்ததை அடுத்து, பெனால்டி ஷூட்அவுட்டில் அர்ஜென்டினா அணி அபார வெற்றி பெற்றது. அணித்தலைவரான லியோனல் மெஸ்ஸி, உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கான நீண்ட கால காத்திருப்புக்கு முடிவுகட்டினார்.

விளையாட்டு வரலாற்றில் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் மெஸ்ஸி, தேசம் மற்றும் கிளப்புகளுடன் அவரது நம்பமுடியாத முடியாத திறன் மற்றும் ஆட்டத்தை அளித்து ஜாம்பவனாக வலம் வந்தாலும் கூட, உலகக் கோப்பை பட்டத்தை மட்டும் அவர் கைப்பற்றாமலே இருந்தார். பல வருட போராட்டத்திற்கு பிறகு, 17 வருடங்கள் கழித்து உலகக்கோப்பையை முத்தமிட்டார் மெஸ்ஸி.

Lionel Messi News in Tamil, Latest Lionel Messi news, photos, videos | Zee News Tamil

மெஸ்ஸி கத்தாரில் கோப்பையை உயர்த்தியபோது போட்டியைக் கண்ட உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். இந்தியாவிலும் கூட, அர்ஜென்டினா நட்சத்திரம் பட்டத்துக்கான காத்திருப்பை முடித்துக் கொண்டதால் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்தியா உட்பட உலகெங்கிலும் நம்பமுடியாத ரசிகர்களை மெஸ்ஸி வைத்திருக்கிறார்.

image

இந்நிலையில் செவ்வாயன்று, இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவா சிங் தோனிக்கு, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி அவருடைய கையொப்பமிட்ட ஜெர்சி ஒன்றை பரிசாக அனுப்பியிருக்கிறார்.

image

மெஸ்ஸி அனுப்பியிருந்த அந்த ஜெர்சியில், “பாரா ஜிவா (ஜிவாவுக்காக)” என எழுதி அவர் கையொப்பமிட்டிருக்கிறார். அந்த ஜெர்சியை ஜிவா அணிந்தவாறு ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதுதான் அனைவரது கவனத்தையும் தற்போது ஈர்த்து வருகிறது. அவர் இட்டிருக்கும் அந்த இடுகைக்கு, “Like Father Like Daughter” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்