ஆந்திரா: மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 4 பேர் பலி

ஆந்திரா: மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 4 பேர் பலி
ஆந்திரா: மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 4 பேர் பலி

மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நான்கு பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி மாவட்டத்தில் உள்ள பரவாடாவில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்றிரவு தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்த நிலையில், தீ விபத்தில் சிக்கி ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களில் நான்கு பேர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்து பற்றி வழக்குப் பதிவு செய்துள்ள பரவாடா போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்தில உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 25 லட்சம் ரூபாய் அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com