[X] Close

பெண்களை கட்டிப்போட்டு 100 பவுன் நகை கொள்ளை: நெல்லையில் பட்டப்பகலில் துணிகரம்

100-sovereign-robbery-in-nellai

நெல்லை பாளையங்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களை கட்டிப்போட்டு, 100 பவுன் நகைகளையும், இரண்டு கார்களையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சக்தி நகரில் மரக்கடை நடத்தி வருபவர் பெஞ்சமின். இவரது கடை அருகே வீடு உள்ளது. இவரது மனைவி மார்சலின் 55, மகள் சுகிமேரி 23. இன்று வழக்கம் போல பெஞ்சமின் கடையில் இருந்துள்ளார். அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் மதியம் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்களை கட்டிப்போட்டு, அங்கு இருந்த 100 பவுன் நகைகளை கொள்ளையடித்தது மட்டுமின்றி, வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களையும் எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரையடுத்து, பாளையங்கோட்டை அருகே டோல்கேட்டில், கடத்திவரப்பட்ட ஒரு காரை போலீசார் பிடித்தனர். கொள்ளையர் ஒருவரையும் கைது செய்தனர். நகைகளுடன் காரில் தப்பிய மற்ற இரண்டு நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் வீட்டிற்குள் புகுந்து பெண்களை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற துணிகர சம்பவம் பாளையங்கோட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close