Published : 26,Dec 2022 11:54 AM

`இன்னும் என்னய்யா தூக்கம் வேண்டிருக்கு...’ மாணவர்களுக்காக ஹரியானா அரசின் ஸ்மார்ட் திட்டம்!

haryana-govt-asks-religious-sites-to-set-alarm-for-its-board-exam-students

பொதுத்தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களை மெனக்கெட்டு காலையில் எழுப்பி படிக்க வைப்பது என்பது சவாலான காரியமாகத்தான் இருக்கும். இந்த சவாலை சமாளிக்க ஹரியானா மாநில அரசு வித்தியாசமான அனுகுமுறையை கையில் எடுத்திருக்கிறது.

அதாவது பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அதிகாலை எழுந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து கோவில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களிடம் முக்கிய கோரிக்கையை வைத்திருக்கிறது.

அதன்படி அதிகாலை 4.30 மணியளவில் வழிபாட்டு தலங்கள் மாணவர்கள் எழுப்பும் விதமாக ஒலி எழுப்ப வேண்டும் என கூறியிருக்கிறதாம். ஏனெனில் படிப்பதற்கு அதிகாலை சமயம்தான் சிறந்த நேரமாக இருக்கும். அப்போதுதான் மூளையும் மனதும் புத்துணர்ச்சியாக இருக்கும். வாகன சத்தம் ஏதும் இருக்காது.

Haryana sounds alert as 12.5 lakh students from private schools go 'missing'

ஆகையால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஆசிரியர்கள், பெற்றோர்களை தொடர்புகொண்டு மாணவர்கள் 4.30 மணிக்கு எழுந்து தயாராகி 5.15க்கு படிக்கத் தொடங்கிவிட்டார்களா இல்லையா என்பதை வாட்ஸ் அப் குரூப் வாயிலாக கண்காணிக்க வேண்டும்.

இதற்கு முறையான தகவல் பெறாத பட்சத்தில் பள்ளி நிர்வாக கமிட்டியிடம் கொண்டுச் செல்லப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தலோடு உத்தரவுகள் பறந்திருக்கிறது. பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் வழிபாட்டு தலங்கள் மூலம் ஒலி எழுப்ப ஹரியானா மாநில கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.

இதுபோக, மேல்நிலை கல்வித்துறையின் இயக்குநர் இது குறித்து அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும், அரசுப்பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை விடுத்திருக்கிறார்.

Board Exams: Haryana Wants Temples, Mosques To Sound Wake-up 'alarm' For Students

அதில், “மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயாரபடுத்த சரியான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. குழந்தைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் சமூகமே நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய பங்காக இருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த செய்திக் குறிப்பில், பொதுத்தேர்வுகளுக்கு இன்னும் 70 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதை நினைவுபடுத்தியதுடன், வாரியத் தேர்வு முடிவுகளை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுக்குமாறும் பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்