Published : 25,Sep 2017 12:28 PM

அமெரிக்க அரசின் தகவல்களை கசியவிட்டாரா ட்ரம்ப் மருமகன்?

Trump-s-son-in-law-leaked-information-from-the-US-government-

டொனால்டு ட்ரம்பின் மருமகன் குஷ்னர் தனது தனிப்பட்ட இ-மெயில் கணக்கு மூலம் அரசு தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மருமகன் குஷ்னர். இவர் ட்ரம்பின் வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் இருந்து வந்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் தமது தனிப்பட்ட இ-மெயில் கணக்கு மூலம் நூறு முறைக்கு மேல் பதில் அளித்திருப்பதாகவும் வழக்கறிஞர் அபே லோவெல் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க சட்டப்படி அரசு தொடர்பான விவகாரங்களுக்கு, தனிப்பட்ட இ-மெயில் கணக்கை பயன்படுத்துவது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது.

அதிபர் தேர்தலின்போது எதிர்க்கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த ஹிலரி கிளின்டன் தனிப்பட்ட இ-மெயில் கணக்கை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தேர்தலில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்து பரப்புரையில் ஈடுபட்ட அதிபர் ட்ரம்பின் மருமகனே தற்போது விதிகளை மீறியிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்