Published : 22,Dec 2022 08:13 PM

மீண்டும் மீண்டும் ஒலித்த 'Boycott'.. 2022இல் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்த 6 திரைப்படங்கள்!

Controversial-Indian-movie-released-in-2022-

1. தி கஷ்மீரி ஃபைல்ஸ்

image

இந்த ஆண்டு வெளிவந்து அதிக சர்ச்சைக்கு உள்ளான திரைப்படம் தி கஷ்மீரி ஃபைல்ஸ். விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய இந்த படத்தினை ஜி studio ஆல் தயாரிக்கப்பட்டது. கஷ்மிரில் ஹிந்து பண்டிட்களுக்கு நிகழ்ந்த பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இத்திரைப்படம் இஸ்லாமிய மக்களை மிகவும் மோசமாக சித்தரித்துள்ளது என்றும் ஹிந்து பண்டிட்களை முஸ்லிம்கள் தான் கொலை செய்தார்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும், பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் பாஜக கட்சியினர் பலர் இப்படத்தை வெகுவாக பாராட்டினர்.

பிரதமர் மோடியும், இப்படம் காஷ்மீர் பயங்கரவாதத்தை மிகவும் துள்ளியமாக சித்தரித்துள்ளது என்று கூறினார். பாஜக கட்சியினர் இந்த திரைப்படத்தைப் பாராட்டிய நிலையில் இடதுசாரி கட்சிகள், ஆம் ஆத்மி மற்றும் கங்கிரஸ் கட்சியினர் இப்படத்தை வெகுவாக விமர்சித்தனர். தென் இந்திய நடிகையான சாய் பல்லவி தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தில் வருவதை போல், காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதற்கும், தற்போது பசுவுக்காக இஸ்லாமியர் அடித்துக் கொல்லப்படுவதற்கும் என்ன வித்தியாசம்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். சாய் பல்லவியின் இந்த கருத்துக்கும் வலதுசாரிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரசார படம் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று  இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாபிட் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பேசியது சர்ச்சையானது.

2.பிரம்மாஸ்திரம்

image

பாலிவுட் திரைத்துறையில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது பிரம்மாஸ்திரம் திரைப்படம். ரன்பீர் கபூர், அலியா ஃப்ட், அமிதாப் பச்சன் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிக்கப்பட்டு பெரும் செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம், பெரும் சர்ச்சையினை சந்தித்தது. முக்கியமாக ரன்பீர் கபூர் மற்றும் அலியா ஃப்ட் ஆகிய இருவரையும் உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வர் கோவிலில் உள் நுழையவிடாமல் பஜ்ரங் தாள் அமைப்பினர் தடுத்தனர். இதற்குக் காரணம் ரன்பீர் கபூர் பல வருடங்கள் முன் அவர் தான் பீப் விரும்பி உண்பவர் என்று கூறும் ஒரு காணொளி வைரல் ஆகி பெரும் சர்ச்சையினை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து #boycottbrahmastra என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகி இப்படத்திற்கு மேலும் சர்ச்சையினை அதிகப் படுத்தியது.

3.நட்சத்திரம் நகர்கிறது

image

சார்பட்டா பரம்பரைக்கு பின்னர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. கலவையான விமர்சனத்தை இப்படம் பெற்றது. சார்பட்ட பரம்பரை ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பு பெற்று பா.ரஞ்சித் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவானது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றிருந்த சில வசனங்கள் சர்ச்சையினை எழுப்பியது. படம் முழுவதும் வசனங்கள் நிரம்பி வழிந்த நிலையில் இதில் இடம் பெற்றிருந்த ரெனே கதாபாத்திரம் மற்றவர்களிடம் சம்பந்தம் இல்லாமல் பேசி சண்டைக்கு இழுக்கிறார் என்ற ஒரு விமர்சனம் எழும்பியது. அது மட்டும் இல்லாமல் ரெனே கதாபாத்திரம் ஒரு கருத்து திணிப்பு செய்கிறது என்ற காட்டமான விமர்சனமும் எழும்பியது. கருத்துகள் பல சொல்லப்பட்டாலும், படத்தில் கலை வடிவமாக கையாண்ட விதம் ஒரு சோதனை முயற்சி போலவே இருந்தது. சர்ப்பட்டா பரம்பரை படம் கலை படைப்பு ரீதியாக ஒரு மாஸ்டர் பீஸ் ஆக உருவாகி இருந்த நிலையில், நட்சத்திரம் நகர்கிறது பெரும்பாலான ஆடியன்ஸ் உடன் கனைட் ஆகவில்லை. 

4.RRR

image

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் RRR. தற்போது உலகம் முழுவதும் பல விருதுகளை குவித்தாலும், வெளியான பொழுது கலவையான விமர்சனங்கள் பெற்றது. அதிக இடங்களில் logic மீறல்கள் காரணமாக வழக்கமான தெலுங்கு திரைப்படம் என்று விமர்சிக்கப்பட்டது. அரசியல் ரீதியாக இப்படம் வலதுசாரி சித்தாந்தங்களை ஆதரிக்கும் திரைப்படம் என்றும் ஒரு தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சுதந்திர போராட்டம் சார்ந்த திரைப்படத்தில் ராமாயண கதையின் தாக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகவும், பழங்குடி மக்களை ஹிந்துவாகச் சித்தரித்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தது.  'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல ஒலி வடிவமைப்பாளரான ரசூல் பூக்குட்டி, ''தன்பாலின ஈர்ப்பாளர்கள் கதை' என பதிலளித்திருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. ஆலியாபட் படத்தில் பிராப்பர்ட்டி போல பயன்படுத்தப்பட்டிருக்கிறார் எனவும் குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்துக்கு 'ஆர்ஆர்ஆர்' பட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு கடுமையான எதிர்வினைகள் கிளம்பியது.

5.லவ் டுடெ

image

பிரதீப் ரங்கநாதன் இயக்கி மற்றும் நடித்த திரைப்படம் லவ் டுடெ. வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது, இளைஞர்களைக் குறி வைத்து எடுக்கப்பட்ட இப்படம் எதிர்பார்ப்பை விட அதிகமாக வசூலினை ஈட்டியது. இப்படத்தில் இடம் பெற்றியிருந்த வசனங்கள் இளைஞர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆனால், இப்படம் பெண்கள் செய்யும் தவறுகள் மூலம் ஆண்கள் பாதிப்புக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்றும் ஆண் ஆதிக்க கருத்துகளை ஊசியில் செலுத்துவது போல் மக்கள் மத்தியில் செலுத்துகிறது என்றும் விமர்சிக்கப்பட்டது. ஆண்கள் செய்யும் தவறுகளை (உத்தமன்) வேடிக்கையாகக் காட்சிப்படுத்தி, பெண்கள் ( நிகித்தா) செய்யும் தவறுகளை மிகவும் தீவிரமான காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மேல் வெறுப்புண்ர்வு காட்டுவது போல் இப்படம் அமைந்து உள்ளது என்று விமர்சிக்கப்பட்டது.

6.கங்குபாய் கத்தியவாடி

image

ஆலிய பாத் நடித்து சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கிய இத்திரைப்படம் கங்குபாய் கத்தியவாடி. படம் வெளி ஆவதற்கு முன்பே சர்ச்சையினை சந்தித்தது. இப்படம் ஹுசைன் ஜைதியின் மும்பை மாஃபியா குயின்ஸ் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்தப்படத்தில் கங்குபாய் என்ற உன்மை கதாபாத்திரம் தவறாக சித்தரிக்க பட்டுள்ளது என்று கங்குபாயின் வளர்ப்பு மகனான பாபு ராவ்ஜி ஷா பாம்பாய் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு முன் பன்சாலி இயக்கிய ராம் லீலா மற்றும் பத்மாவத் படங்களும் பெரும் சர்ச்சையினை எழுப்பி வெளியாவதில் சிக்கலை ஏற்படுத்தியது.

7.லால் சிங் சத்தா 

image

Forrest gump என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் remake இந்த லால் சிங் சத்தா. முப்பது வருடம் கஷ்டப்பட்டு இந்த படத்தின் மறு ஆக்கம் உரிமத்தைப் பெற்றார் அமீர்கான். தன்னுடைய கனவு படமான Forrest gump வெளியாகும் பொழுது தோல்வியினை சந்தித்தது. அதற்கு மிக முக்கிய காரணம் அவர் நடித்த PK திரைப்படத்தில் ஹிந்து கடவுளை அவமானம் படுத்தி இருக்கிறார் என்றும் மேலும் சில அவர் பேசிய சில கருத்துக்களை குறிப்பிட்டும் #boycottlalsinghchaddha மற்றும் #boycottaamirkhan ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்தனர். 

மேற்சொன்ன படங்கள் படத்தின் கருத்துக்களும், அதில் நடித்தவர்கள் தொடர்பான விஷங்களையும் ஒட்டி சர்ச்சைகள் சுற்றி சுழன்றது.

பொன்னியன் செல்வன் -1

image

மணிரத்னம் இயக்கி விக்ரம், கார்த்தி ஐஸ்வர்ய ராய், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் நடித்து பெரும் எதிர்பார்ப்பில் உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். வெளிவந்த மிகப்பெரிய வெற்றியினை அடைந்தது. அதன் பிறகு மக்களுக்கு சோழ மன்னர்கள் பற்றி அறிய ஆர்வம் எழும்பியது. இதன் பின் இணையத்தளத்தில் இதைச் சார்ந்த தகவல்கள் அதிகமாகப் பார்க்கப் பட்டது. அப்பொழுது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் வெற்றிமாறன் ராஜ ராஜ சோழன் ஒரு ஹிந்து அல்ல என்று கூறினார். வெற்றிமாறன் கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கமல் ஹாசனிடம் இந்த கேள்வி கேட்டபொழுது அவர் ராஜ ராஜ சோழ காலத்தில் ஹிந்து என்ற வார்த்தை இல்லை என்றும் சைவம், வைணவம் மற்றும் சமணம் ஆகியவை தான் இருந்ததாகவும். ஹிந்து என்ற பெயர் பிரிட்ஷ்காரர்களால் வைக்கப்பட்ட பெயர் என்று கூறினார்.

படத்துடன் நேரடியாக இல்லையென்றாலும் பொன்னியின் செல்வம் படம் வெளியானதையொட்டி இந்த சர்ச்சைகள் சில நாட்கள் நிலவியது குறிப்பிடத்தக்கது.

- சுஹைல் பாஷா

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்