Published : 20,Dec 2022 03:12 PM

`ராகுல்காந்தியை அவர் கட்சியினரே தலைவராக ஏற்காதபோது மக்கள் ஏற்பார்களா?’- பாஜக விமர்சனம்

My-rallies-more-popular-than-Rahul-Gandhi--says-Congress-troubleshooter-Kamal-Nath---s-son

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் மக்களை ஒன்றிணைக்கும் வகையில், 3,750 கிலோமீட்டரை 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் இணைக்கும் வகையில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் பிரச்சனை தீர்க்கும் வல்லுநர் கமல்நாத்தின் (மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்) மகன் நகுல்நாத் பேசுகையில், “ராகுல் காந்தியின் இந்த பேரணியை விட எனது பேரணிகள் மிகவும் பிரபலமானவை” எனக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்களை பல பாஜக தலைவர்கள் பகிர்ந்தும் விமர்சித்தும் வருகின்றனர்.

image

நகுல்நாத் அந்த வீடியோவில், “நான் ராகுல் காந்தியுடன் மத்தியப் பிரதேசம் முழுவதும் சென்றேன். ஆனால், பாரத் ஜோடோ யாத்திரையை விட இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்பதை பெரேசியா மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் அரசியல் வட்டத்தில் பேசுபொருளாகி வருகின்றது.

இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவாலா, காங்கிரஸை விமர்சிக்கும் வகையில் “காங்கிரஸ் தலைவர்களே ராகுல் காந்தியைத் தலைவராகக் கருதாதபோது, மற்ற கட்சி தலைவர்களும் இந்திய மக்களும் அவரை எப்படி அவரை தலைவரென தீவிரமாக எடுத்துக் கொள்வர்?" என்று பதிவிட்டிருக்கிறார்.

- அருணா ஆறுச்சாமி

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்