கலகலப்பு பார்ட் 2 எடுக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பு அறிவித்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் 2012ல் வெளியான படம் கலகலப்பு. காமெடி வகையான படங்களில் அதிக வசூலை அள்ளிய படம் என்ற பேரை இது சம்பாதித்தது. இந்தப் படத்தை டிரெண்ட் ஆக்கி பல படங்கள் வெளி வந்தன. இதில் சிவா, விமல், அஞ்சலி, ஓவியா, சந்தானம் என பலர் நடித்திருந்தனர். இதன் வெற்றியை மனதில் கொண்டு பார்ட் 2 எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு.
அப்படி பார்ட் 2 எடுக்கப்பட்டால் அதில் ஓவியா இருப்பாரா என எதிர்பார்ப்பு இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் அவரது மார்க்கெட் அளவு உயர்ந்ததே எதிர்பார்ப்புக்கான முக்கிய காரணம். கலகலப்பு காமெடி வெற்றிக்கு சந்தானமும் முக்கிய காரணம். அவர் தற்சமயம் ஹீரோவாக களம் இறங்கிவிட்டார். பெரிய ஹீரோக்கள் படங்களில் கூட அவர் காமெடி ரோலில் நடிப்பதில்லை.
இந்நிலையில் குஷ்பு அறிவித்துள்ள கலகலப்பு 2 பட்டியலில் ஜீவா, ஜெய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரஸா நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சுந்தர் சி இயக்கும் இப்படத்திற்கு அவரது ஃபேவரைட்ஸ் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். அடுத்த மாதம் அக்டோபரில் படப்பிடிப்புக்கான வேலைகள் ஆரம்பமாக உள்ளன.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!