Published : 20,Dec 2022 09:30 AM

அப்பாவின் பிறந்த நாளன்று எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்- கிஃப்ட் கொடுத்து நெகிழ வைத்த மகன்!

son-surprised-his-dad-with-his-dream-bike-on-his-59th-birthday

பெற்ற குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றி, அவர்களுக்கு பரிசு கொடுப்பதை பொதுவாக அப்பாக்கள் வாடிக்கையாக கொண்டிருப்பார்கள் என கேள்வியுற்றிருப்பீர்கள். ஆனால் மற்றவர்களை ஆசையை நிறைவேற்றும் அப்பாக்களின் ஆசையை மகன் பூர்த்தி செய்த நெகிழ்ச்சி தருணம் குறித்த வீடியோ ஒன்றுதான் இன்ஸ்டாகிராம் தளத்தில் பெருமளவில் வைரலாகியிருக்கிறது.

அதன்படி ஃபிட்னஸ் கோச்சாக இருக்கும் உஜ்வல் சித்நாக் என்பவர் தனது தந்தையின் பிறந்த நாளன்று அவருக்கு பிடித்தமான சிறப்பான பரிசை கொடுத்து சர்ப்ரைஸ் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஷேர் செய்துள்ள வீடியோவில், “அப்பாவின் 59வது பிறந்த நாளன்று அவரது நீண்டநாள் கனவை நிறைவேற்றியிருக்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் கேப்ஷனில், “அப்பாவுக்கு எப்பவுமே அவரது அப்பாவின் பைக் என்றால் ரொம்பவே பிடிக்கும். ஆனால் தாத்தா சப்-இன்ஸ்பெக்டராக இருந்ததால் காவல்துறையிடமே கொடுத்துவிட்டார். ஆனால் அந்த பைக்கின் நினைவு அப்பாவின் மனதை விட்டு போகாமல் இருந்தது கடந்த ஆண்டு வரை தெரியாமல் இருந்தது.

View this post on Instagram

A post shared by  |  (@usidbodypro)

எதேர்ச்சையாக குறிப்பிட்ட அந்த பைக் ஷோரூமிற்கு சென்றபோது அங்கு சேல்ஸ்மேனிடம் பைக் பற்றி ஒவ்வொன்றையும் ஈடுபாட்டோடு கேட்டுவிட்டு அவ்வளவு செலவு செய்ய இப்போ காசு இல்லை. விலை அதிகமாக இருக்குனு சொல்லிவிட்டார். ஆனால் தாத்தா ஓட்டிய அந்த பைக்கின் புது வெர்ஷனாக இருந்ததால் அப்பாவுக்கு அந்த பைக் மிகவும் பிடித்திருந்தது. ஆகையால் அவரது பிறந்த நாளுக்கு இதைவிட சிறந்த பரிசு வேறு எதுவும் இருக்க முடியாது என முடிவெடுத்தேன்.” என உணர்வுப்பூர்வமாக குறிப்பிட்டிருக்கிறார் உஜ்வல் சித்நாக்.

அந்த வீடியோவை இதுவரையில் 35 லட்சத்துக்கும் மேலானோர் பார்த்தும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக்கும் இட்டிருக்கிறார்கள். இதுபோக, ஏராளமானோர் அப்பாவின் ஆசையை கனவை நிறைவேற்றிய உஜ்வலின் செயலுக்கு பாராட்டுகளையும் தெரிவித்திருக்கிறார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்