தீபாவளிக்கு ‘வில்லன்’ பொங்கலுக்கு ‘இரும்பு திரை’ விஷால் அறிவிப்பு

தீபாவளிக்கு ‘வில்லன்’ பொங்கலுக்கு ‘இரும்பு திரை’ விஷால் அறிவிப்பு
தீபாவளிக்கு ‘வில்லன்’ பொங்கலுக்கு ‘இரும்பு திரை’ விஷால் அறிவிப்பு

தீபாவளிக்கு ‘வில்லன்’படமும்  பொங்கலுக்கு’ இரும்புதிரை’ படமும் வெளி வரும் என விஷால் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தற்சமயம் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ திரையில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து இப்படத்தின் தெலுங்கு டப்பிங் ‘டிடெக்டிவ்’ வருகின்ற அக்டோபர் 18ம் தேதி வெளியாகிறது. தமிழில் தீபாவளி விருந்தாக மோகன்லால் மற்றும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ’வில்லன்’ படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகிறது. அடுத்து இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘இரும்புதிரை’யில் நடித்து கொண்டிருக்கிறார் விஷால். இந்தப் படம் வருகின்ற தை பொங்கல் விருந்தாக 2018 ஜனவரி 12 அன்று வெளியாகும் என விஷால் தரப்பில் செய்தி வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com