
நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்படம் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுதாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில், சிவாஜி கணேசன் சிலையை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம், சிவாஜி கணேசன் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில், சிவாஜி கணேசனின் 90-ஆவது பிறந்த நாளையொட்டி அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி மணிமண்டபம் திறந்து வைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு, புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி இடம்பெற உள்ளது. இதன் திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினி, உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. 2.80 கோடி செலவில் 2,124 சதுர அடியில் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.