2 நிமிடங்களில் ஆட்டத்தை திருப்பிய எம்பாப்வே! 2-2 என்ற நிலையில் சுவாரஸ்யம் கூட்டிய பைனல்!

2 நிமிடங்களில் ஆட்டத்தை திருப்பிய எம்பாப்வே! 2-2 என்ற நிலையில் சுவாரஸ்யம் கூட்டிய பைனல்!
2 நிமிடங்களில் ஆட்டத்தை திருப்பிய எம்பாப்வே! 2-2 என்ற நிலையில் சுவாரஸ்யம் கூட்டிய பைனல்!

பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் 2-2 என்ற கணக்கில் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது பைனல்.

கத்தார் 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலில் இரண்டு கோல்கள் அடித்து அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. முதல் பாதி முடிந்த நிலையிலும் ஒருகோல் கூட அடிக்கமுடியாமல் பிரான்ஸ் அணி தடுமாறி வந்தது.

23, 36ஆவது நிமிடத்தில் கோல் அடித்த அர்ஜெண்டினா!

போட்டி தொடங்கிய தொடக்கத்துலயே 23ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோலை அடித்தார் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி. தொடர்ந்து 36ஆவது நிமிடத்தில் அற்புதமான கோலை பதிவு செய்தார் டி மரியா.

80, 81 என இரண்டே நிமிடத்தில் போட்டியை மாற்றிய எம்பாப்வே!

பிரான்ஸ் அணி கோலே அடிக்காமல் கடைசி வரை சென்றுகொண்டிருந்த போட்டியில், போட்டியின் 80ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திகொண்ட பிரான்ஸ் அணியின் எம்பாப்வே அற்புதமான கோலை பதிவு செய்தார். பின்னர் அடுத்த நிமிடத்திலேயே இரண்டாவது கோலை பதிவு செய்த எம்பாப்வே, அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

2-2 என டிராவில் முடிந்த போட்டி!

அற்புதாமான முடிவை எட்டிய போட்டி 2-2 என்ற நிலையில் டிராவில் முடிந்துள்ளது. இந்நிலையில் பெனால்டி சூட் முறையில் முடிவு சற்று நிமிடத்தில் தெரியவிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com