Published : 07,Feb 2017 04:05 PM

ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மெளன அஞ்சலி

Chief-Minister-O--Panneerselvam-silence-at-chennai

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 40 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட, அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா‌ முதலமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அதிமுகவின் கட்சிச் சட்டப்படி, பொதுச் செயலாளரை பொதுக்குழு தேர்வு செய்ய முடியாது எனவும் பொது உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் எனவும் பி.எச்.பாண்டியன் மற்றும் மனோஜ்பாண்டியன் இன்று கூறியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய செங்கோட்டையன், பி.எச்.பாண்டியன் அதிமுக வளர்ச்சிக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை. 96ல் அம்மா மீது வழக்கு தொடர காரணமாக இருந்தார் என்று குற்றம்சாட்டினார்.

முன்னதாக முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி அதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இதையடுது ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் பங்கேற்க இருந்த 2 நிகழ்ச்சிகள் ரத்து செய்து விட்டு நாளை சென்னை வருகிறார் என மும்பை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஆளுநர் வருகையை அடுத்து சசிகலா முதலமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நிலவிவரும் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சரின் மெளன அஞ்சலி முக்கியதுவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்