Published : 15,Dec 2022 10:04 AM

இந்தியாவிலேயே மதிப்புமிக்க சூப்பர்காரை வாங்கி அசத்திய தொழிலதிபர்... விலை எவ்வளவு தெரியுமா?

Hyderabad-businessman-buys-one-of-the-most-expensive-super-car-in-India

இந்தியாவிலேயே விலைமதிப்புமிக்க சூப்பர்கார்களில் ஒன்றை வாங்கி அசத்தியுள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் தொழிலதிபர்.

ரூ.12 கோடி மதிப்புள்ள McLaren 765 LT Spider காரானது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது. இது மிகவும் விலைமதிப்புமிக்க கார்களில் ஒன்று. இதன் விலை ரூ. 12 கோடி. இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த காரை வாங்கியுள்ளார் தொழிலதிபர் நசீர் கான். இதனால் இந்தியாவின் முதல் 765 LT Spider காருக்கு சொந்தக்காரர் என்ற பெருமையை பெறுகிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான கான். தாஜ் ஃபலக்னுமா மாளிகையில் வைத்து கார் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது.

தனது புதுவரவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கான், ”வெல்கம் ஹோம் MCLAREN 765LT Spider. இந்த அழகை டெலிவரி செய்ய என்ன ஒரு கம்பீரமான இடம்!” என குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரிய மாளிகையின் முன் சிவப்புநிறத்தில் பளபளப்புடன் நிற்கும் காருக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

image

MCLAREN உருவாக்கியதிலேயே இந்த அற்புதமான கார்தான் அதிவேகமான கார் என குறிப்பிட்டிருக்கிறது Cartoq.com. கூபே பதிப்பு போன்ற அதீத ஏரோடைனமிக் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் மிகச்சிறந்த சிறப்பம்சம் என்னவென்றால், இதன் மேற்கூரையானது வெறும் 11 நொடிகளில் மடிந்து விரியுமாம்.
இந்த காரானது 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு V8 பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த எஞ்சின் 765 Ps மற்றும் 800 Nm வேகத்தில் பறக்கக்கூடியது.

image

கான் தன்னை கார் சேகரிப்பவர் மற்றும் சுயதொழிலதிபர் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலைமதிப்புமிக்க கார்களுடன் போஸ் கொடுத்த புகைப்படங்களையே பதிவிட்டுள்ளார். கானிடம் ஏற்கனவே Rolls Royce Cullinan Black Badge, Ferrari 812 Superfast, Mercedes-Benz G350d, Ford Mustang, Lamborghini Aventador, Lamborghini Urus போன்ற பல விலை மதிப்புமிக்க கார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்