Published : 12,Dec 2022 02:25 PM

”மக்கள் கூப்பிட்டால் வருவேன்” - லெஜெண்ட் சரவணா கூறிய அதிரடி பதில்.. எதற்கு தெரியுமா?

the-legend-saravana-himself-give-update-about-his-next-movie

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான தொழிலதிபர் சரவணாவின் தி லெஜெண்ட் படம் கடந்த ஜூலை 28ம் தேதி வெளியானது. காமெடி, ஆக்‌ஷன் என பக்கா கமெர்சியல் படமாக உருவானது. படத்தின் பாடல்கள், டிரெய்லர் பல மில்லியன் கணக்கில் வியூஸ் பெற்றிருந்தது.

தியேட்டரில் வெளியான தி லெஜெண்ட் படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த நிலையில், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாவதாக தகவல் வெளியானது. ஆனால் இன்னும் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில் தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டை லெஜெண்ட் சரவணாவே கூறியிருக்கிறார். கோவையில் நடந்த கடை திறப்பு விழாவில் பங்கேற்றிருந்த லெஜெண்ட் சரவணா அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.

image

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலின் விவரம் பின்வருமாறு:

தி லெஜெண்ட் படத்துக்கு பிறகு வேறு என்னென்ன படங்கள் கைவசம் இருக்கிறது என்ற கேள்விக்கு, “அடுத்த படம் தயாராகிட்டு இருக்கு. விரைவில் அதுபற்றிய தகவலை அறிவிக்கிறோம்.” என்று சரவணன் கூறியுள்ளார்.

தொடர்ந்து, திரைத்துறைக்கு பிறகு அரசியலுக்கு வருவது தொடர்கிறது. உங்களுடைய முடிவு என்ன என கேட்டதற்கு, “அது மக்களும் மகேசனும்தான் முடிவு பண்ணனும். மக்கள் கூப்பிட்டால் வருவேன்.” என்று அதிரடியாக பதிலளித்திருக்கிறார் சரவணன். இதையடுத்து, தமிழக்கத்தில் நடக்கும் ஆட்சியை பற்றி கேட்டபோது, “நல்லா சிறப்பாக இருக்கிறது.” என்று சரவணன் தெரிவித்திருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்