Published : 10,Dec 2022 04:01 PM

வரதட்சணையே இல்லாமல் நடைபெற்ற திருமணம்.. 23 நாட்களில் மணப்பெண் விபரீத முடிவு

Newly-married-woman-committed-suicide-at-Namakkal

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான 23 நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருக்கும் வசுமதி என்பவருக்கும் கடந்த 23 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பொறியியல் பட்டதாரியான வசுமதியை எந்தவிதமான வரதட்சணையும் இன்றி வினோத் வினோத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்த வசுமதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியில் உடைந்து போன வசுமதியின் குடும்பத்தினர் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

image

வரதட்சணை வேண்டாம் என்று கூறி வினோத் திருமணம் செய்துகொண்ட நிலையில் அடுத்த சில நாட்களிலேயே கணவன் - மனைவி இடையே கடும் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் வசுமதி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமணமான இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்