Published : 09,Dec 2022 01:45 PM

மும்பை திரும்பிய ரோகித் சர்மா: டெஸ்டில் விளையாடுவாரா? -முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ

BCCI-Provides-Important-Update-On-Rohit-Sharma-Thumb-Injury

கட்டை விரலில் காயம் அடைந்த ரோகித் சர்மா மும்பை திரும்பியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற வங்கதேசம் அணியானது தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ள நிலையில், அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (டிச.10) நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்குப் பின்னர் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது டிசம்பர் 14ஆம் தேதி துவங்குகிறது.

image

நடைபெற்று முடிந்த 2வது ஒருநாள் போட்டியின் போது கட்டை விரலில் காயம் அடைந்த ரோகித் சர்மா, கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  டெஸ்ட் போட்டியிலாவது விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மாவின் நிலை குறித்து பிசிசிஐ ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. ரோகித் சர்மா தனது கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தை சிறப்பு மருத்துவரிடம் பரிசோதிப்பதற்காக இந்தியா திரும்பியுள்ளார் என்றும் காயத்தின் தன்மையை அறிந்த பிறகே அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? இல்லையா? என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தவற விடாதீர்: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ரோகித் சர்மாவுக்கு மாற்றாக வரப்போகும் அந்த வீரர் இவர்தானா?

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்