ஹர்திக் பாண்ட்யா இந்திய கிரிக்கெட் அணியின் சொத்து என்று கேப்டன் விராத் கோலி சொன்னார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரைக் கைப்பற்றியது. இந்தூரில் நேற்று நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 293 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, 47.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 78 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
வெற்றிக்குப் பின் பேசிய விராத் கோலி, ’இந்த பிட்சில் 330-340 ரன்கள் வரை குவித்திருக்க முடியும். ஆஸ்திரேலியா 35- 40 ரன்கள் குறைவாக எடுத்தது எங்களுக்கு நல்லதாகிவிட்டது. இந்தப் போட்டியில் பாண்ட்யாதான் ஸ்டார். பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் அசத்தி வருகிறார். அவரை போன்ற வீரர்கள்தான் தேவை. பாண்ட்யா இந்திய கிரிக்கெட் அணியின் சொத்து. சுழல் பந்துவீச்சை வதம் செய்யுமாறு அவரைப் பின்னால் இருந்து தூண்டியவரும் நான்காவது இடத்தில் அவரை களமிறக்கச் சொன்னவரும் ரவிசாஸ்திரிதான். எங்கள் வெற்றிப் பயணம் தொடரும்’ என்றார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!