Published : 08,Dec 2022 09:25 PM

சப்ஸ்டிட்யூட் பயிற்சியில் பங்குபெறாமல் தவிர்த்த ரொனால்டோ! கோச் உடன் முற்றுகிறதா பனிப்போர்?

Ronaldo-skips-training-session-for-substitutes-after-being-benched-in-Portugal-vs-Switzerland-Round-of-16-match

போர்ச்சுகல் கால்பந்தாட்ட வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மீண்டும் பேசுபொருளாக இருந்து கொண்டே இருக்கிறார். 37 வயதாகும் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ, போர்ச்சுகல் - சுவிட்ஸர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் பென்ச்-சில் அமரவைக்கப்பட்ட முதல் இந்த டாக் மேலும் வலுப்பெற்றது. என்னதான், ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட கோன்கலோ ராமோஸ் ஹாட் ரிக் கோல் அடித்து அசத்தி 6-1 என்ற கணக்கில் அணியை வெற்றி பெற வைத்தாலும், ரொனால்டோ பென்சில் உட்கார வைக்கப்பட்டதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வைரலாகிய ரொனால்டே காதலியின் இன்ஸ்டா பதிவு!

ரொனால்டோவின் காதலி ஜியோர்ஜினா, ஸ்டேடியத்தில் இருந்துகொண்டு போர்ச்சுகல் அணியின் மேலாளரை டேக் செய்து, `வாழ்த்துகள் போர்ச்சுகல் அணியில் 11 வீரர்கள் கீதம் பாடியபோது, அனைவரின் பார்வையும் உங்கள் மீதுதான் இருந்தது. இப்படியொரு போட்டியை, உலகின் சிறந்த வீரரை 90 நிமிடங்கள் அனுபவிக்க முடியாமல் ஆக்கியுள்ளனர். மிகப்பெரிய அவமானம் இது! ரசிகர்கள், நிறுத்தாமல் இதுபற்றி கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருந்தனர். இருக்கட்டும். கடவுளும், உங்கள் நண்பர் ஃபெர்னாண்டோவும் கைகோர்த்துக்கொண்டு, இன்னொரு இரவிலும் இதேபோல எங்களுக்கு அதிர்வலைகளை கொடுக்கட்டும்” என தனது இன்ஸாவில் பதிவிட்டிருந்தார். இதுவொருபுறமிருக்க, ரொனால்டோவின் ரசிகர்கள் நேற்றைய ஆட்டத்தின்போது மைதானத்தில் அவர் பெயரை சத்தமாக உச்சரித்துக்கொண்டே இருந்தனர்.

image

ரொனால்டோவை உட்கார வைக்க இதுதான் காரணமா?

முன்னதாக தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு பெரும் தவறுகளைச் செய்திருந்தார் ரொனால்டோ. அதில் ஒன்று தென் கொரியா அணி கோல் அடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. மற்றொன்று கோல் அடிப்பதற்கான வாய்ப்பை தாமே தவற விட்டது. அப்போது ரொனால்டோவுக்கு பதிலாக மாற்று வீரரை சான்டோஸ் களமிறக்கியபோதே, ரொனால்டோ தனது உடல்மொழி மூலமாக அதிருப்தியை தெரிவித்தார். இதனால் கூட இந்த ஒரு போட்டியில் அவர் களத்துக்குள் இறக்கப்படவில்லை என்றும் விமர்சனங்கள் உள்ளன.

மெரோக்கோ உடனான போட்டியில் ரொனால்டோ இருப்பாரா?

டிசம்பர் 10ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோ, போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் ரொனால்டோ இறக்கப்படுவாரா, இல்லை அதிலும் பென்ச்சில் அமர வைக்கப்படுவாரா என்பது இதுவரை தெரியவில்லை. இந்தப் போட்டியில் அவருக்கு மாற்றாக இறக்கப்பட்ட வீரர், மிகச்சிறப்பாக விளையாடியதால் `அணிக்கு ரொனால்டோ தேவையில்லையோ’ என்ற எண்ணம் அவரது கோச்-க்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே கோச் ஃபெர்னால்டோவுக்கும் ரொனால்டோவுக்கும் மோதல் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், இனி வரும் ஆட்டங்களில் ரொனால்டோ முதலில் களமிறக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

image

பயிற்சியை தவிர்த்தார் ரொனால்டோ!

இந்நிலையில், சப்ஸ்டிட்யூட்களுக்கான பயிற்சியை கிறிஸ்டியானோ ரொனால்டோ தவிர்த்துள்ளார். பயிற்சிக்கு வராமல் ஜிம்மிலேயே அவர் வழக்கம் போல் பயிற்சி எடுத்தார். இதுவும் தற்போது அவர் குறித்தான பல்வேறு கருத்துக்களுக்கு வழிவகுத்துள்ளது.

இதனிடையே, பயிற்சியாளர் சாண்டோ கூறுகையில், “எனக்கு என்ன யுக்தி சரியென்று படுகிறதோ எதை நான் நம்புகிறேனோ அதனை களத்தில் பயன்படுத்துவேன். என் வாழ் நாள் முழுவதும் இதனையே பின்பற்றி வந்துள்ளேன்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால், பயிற்சியாளர் உடனான ரொனால்டோவின் பனிப்போர் முற்றியுள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.

உலகக்கோப்பை வரலாற்றில் ரொனால்டோ இதுவரை பென்சில் அமர வைக்கப்பட்டதில்லை. முதல் முறையாக தன்னை பென்சில் அமரவை வைத்தது அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். இருப்பினும், ஒரு சில போட்டிகளை வைத்து ரொனால்டோவை ஓரங்கட்டுவது சரியாக இருக்குமா எனவும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இனி வரும் ஆட்டங்களில் ரொனால்டோ விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்