ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடி போட்டியை மாற்றிவிட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரைக் கைப்பற்றியது. இந்தூரில் நேற்று நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டு இழப்பிற்கு 293 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஆரோன் பிஞ்ச் சதம் அடித்தார். பின்னர் ஆடிய இந்திய அணி, 47.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 78 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதன் மூலம் 5 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில், 3 வெற்றிகளை பெற்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டிக்குப் பின் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், ’நாங்கள் சிறப்பாக ஆடினோம். ஆரோன் பிஞ்ச் பிரமாதமாக ஆடி சதமடித்தார். 37-38 ஓவர் வரை சிறப்பாக ஆடிய நாங்கள் பிறகு அதை தக்க வைக்கத் தவறிவிட்டோம். இந்திய பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர்குமாரும் பும்ராவும் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் 330 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால் போட்டியின் தன்மை மாறியிருக்கும். அதே நேரம் ஹர்திக் பாண்ட்யா, சிறப்பாக விளையாடி போட்டியை அற்புதமாக மாற்றிவிட்டார்.’ என்றார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்