மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முறுக்கு கம்பெனி அதிபர் வீட்டில் 13 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் முறுக்கு கம்பெனி வைத்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது சொந்த ஊரில் உள்ள, தன் வீட்டை பூட்டிவிட்டு சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இவ்வீட்டின் முன்புற விளக்கை தினமும் சுரேஷின் சகோதரி பேச்சியம்மாள், இரவில் போட்டுவிட்டு காலை மீண்டும் அணைத்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் இரவு வீட்டின் முன்பகுதியில் உள்ள விளக்கை போட்டுவிட்டு சென்ற பேச்சியம்மாள் காலை வழக்கம் போல் விளக்கை அணைக்க வந்தபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கபட்டு இருப்பதைக் கண்டு உசிலம்பட்டி காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதன் அடிப்படையில் உசிலம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், 13 சவரன் தங்க நகை மற்றும் 3 கொலுசுகள் திருடு போனது கண்டறியப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Loading More post
சூறைக்காற்றால் குளிரும் டெல்லி! விமான சேவைகள் பாதிப்பு
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்