இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்: முதலில் பேட்டிங் செய்யும் வங்கதேசம்

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்: முதலில் பேட்டிங் செய்யும் வங்கதேசம்
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்: முதலில் பேட்டிங் செய்யும் வங்கதேசம்

2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி மிர்பூர் தேசிய அரங்கில் தற்போது நடக்கிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி இந்திய அணியினர் பீல்டிங் செய்ய தயாராகி வருகின்றனர். இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றி உத்வேகத்துடன் இருக்கும் வங்கதேச அணி இன்றைய போட்டியிலும் வெற்றிக்கனியை பறிக்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

பிளேயிங் லெவனில் ஒரு மாற்றமாக அக்சர் படேல், உம்ரான் மாலிக் இடம்பிடித்துள்ளனர். முதல் போட்டியில் விளையாடிய குல்தீப் சென் முதுகு வலி காரணமாக 2-வது போட்டியில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com