நீலகிரி மாவட்டத்திலுள்ள தமிழக எல்லைப் பகுதியை கேரள அதிகாரிகள் ஆக்கிரமித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, எல்லை குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள தாளூர், தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அவ்வப்போது எல்லை குறித்த சர்ச்சை தொடர் கதையாகி வருகிறது. 2016ஆம் ஆண்டு வரை இரு மாநிலங்களுக்கு இடையேயுள்ள ஆறுதான் எல்லையாக இருந்துள்ளது. ஆனால், சமீபகாலமாக ஆற்றை கடந்து தங்கள் எல்லை இருப்பதாக கேரள அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தமிழக எல்லைக்குட்பட்ட சாலையில் கேரள அதிகாரிகள் புதிதாக எல்லைக்கோடு அமைத்துள்ளனர். எவ்வித தகவலும் இன்றி 100 மீட்டர் தூரம் வரை தமிழகப் பகுதியில் புதிய எல்லை கோடு அமைக்கப்பட்டுள்ளதால், தமிழர்கள் பயன்படுத்தி வந்த ஆட்டோ நிறுத்துமிடம், மின்கம்பம் உள்ளிட்டவை கேரளாவிற்குட்பட்டதாகிவிட்டது. அதனால், அந்தப் பகுதி மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட வருவாய் அலுலவர் பாஸ்கர பாண்டியனிடம் கேட்டபோது, எல்லை தொடர்பான வரைபடங்களை வைத்து, இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். மேலும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்