Published : 06,Dec 2022 08:47 AM
’ அட இது என்ன மிருகம்?’ சாலையை கூலாக கடந்துசென்ற விசித்திர விலங்கு - வைரலாகும் வீடியோ

ஓநாய் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். ஆனால் ‘மனித ஓநாய்’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா? சமீபத்தில் இதுபோன்ற விசித்திரமான விலங்கு ஒன்று வீதியில் நடந்துசென்ற வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
ரெக் சாட்லர் என்ற டிவிட்டர்வாசி பதிவிட்ட அந்த வீடியோவில், மனித ஓநாய் என்ற விசித்திர விலங்கு கேமிராவை பார்த்தபடி, கூலாக சாலையை கடந்துசெல்கிறது. பார்த்தவுடன் ஓநாய்போல் இருக்கும் அந்த விலங்கை உற்றுப்பார்த்தால் அது நரிபோன்று இருக்கிறது. ஆனால் அதன் கால்கள் மான் கால்களைப்போன்று நீளமாக இருப்பதுடன், நளினமாகவும் நடந்துசெல்கிறது. இதனைப் பார்த்து வியந்துபோன ரெக், “இது என்ன கொடுமை என்று யாருக்காவது தெரியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Does anyone know what the heck this is?!
— Reg Saddler (@zaibatsu) December 3, 2022
via Imgur pic.twitter.com/FwBBJCfgb6
இந்த வீடியோவை இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பலரும் இது என்ன மிருகம் என கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் இது கழுதைப்புலி என்று குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் இதனை குள்ளநரி மற்றும் ஓநாய் அல்லது கழுதைப்புலியின் கலப்பு வகை என்று குறிப்பிட்டுள்ளார்.