சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளி கொலை: பெண் ஒருவரிடம் விசாரணை

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளி கொலை: பெண் ஒருவரிடம் விசாரணை
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளி கொலை: பெண் ஒருவரிடம் விசாரணை

சென்னை நுங்கம்பாக்கம் மேல்பாடி முத்து தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்த சுகுமாறன் ‌‌என்பவர்‌ கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் மேல்பாடி முத்து தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் சுகுமாறன். மாற்றுத்திறனாளி. திருமணம் ஆகவில்லை. சகோதரி திலகாவுடன் கோடம்பாக்கம் வரதராஜபேட்டையில் வசித்து வந்தார். தினமும் இரவு பணிக்கு சென்று விட்டு காலையில் சுகுமாறன் வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். இன்று வீட்டிற்கு செல்லவில்லை. இதனிடையே அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இன்று காலை மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது சுகுமாறன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் இறந்து‌ கிடந்ததை பார்த்த குடியிருப்பு வாசிகள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனப்படிடையில் சென்னை நுங்கம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் அடுக்கு மாடி குடியிருப்புக்கு வந்து சென்ற போது ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கும், சுகுமாறனுக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ள பெண் ஒருவரிடமும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com