Published : 02,Dec 2022 04:22 PM

ஐபிஎல்-ல் அறிமுகமாகிறது புதிய ”டேக்டிகல் சப்ஸ்டியூட் பிளேயர்” ரூல்!அதிரடிகளை ஏற்படுத்துமா?

New--Tactical-Substitute-Player--Rule-Introduced-in-IPL--Will-It-Cause-Action-

சப்ஸ்டியூட் எனப்படும் மாற்றுவீரர்களை பயன்படுத்திகொள்ளும் புதிய விதியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி இருக்கிறது ஐபிஎல் நிர்வாகம்.

இந்த ஒரு புதிய விதியானது போட்டிகளில் பல அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் ஒரு யுத்தியாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சூப்பர் ஓவருக்கு சூப்பர் ஓவர், அனைத்து ஒவர்களையுமே கண்காணிக்க தனி அம்பயர் என அனைத்து சுவாரசியங்களையும் கூட்டியிருக்கும் ஐபிஎல், தற்போது “டேக்டிகல் சப்டியூட் பிளேயர்” என்ற புதிய விதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

image

அது என்ன ”டேக்டிகல் சப்ஸ்டியூட் பிளேயர்” விதி?

தந்திரமாக மாற்றுவீரர் ஒருவரை எப்போது வேண்டுமானாலும் எந்த ஒரு வீரருக்கு மாற்றாகவும் அணிக்குள் எடுத்து வந்து ஆடவைக்கும் விதிமுறை தான் இந்த ”டேக்டிகல் சப்ஸ்டியூட் பிளேயர்” விதி. எத்தனை வீரரை களமிறக்கலாம் என்றால், ஒரு வீரர் மட்டும் தான் அனுமதிக்கப்படுவார்.

இதற்கு முன் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா!

இதற்கு முன் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்றால், சையத் முஸ்டாக் அலி கோப்பையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிசிசிஐ-ன் பரிந்துறையின் பேரில் இந்த புதிய விதியை புது வருட ஐபிஎலில் இன்னும் சுவாரசியத்தை கூட்டுவதற்கான அறிமுகப்படுத்தி உள்ளது ஐபிஎல் நிர்வாகம். இந்த ”டேக்டிகல் சப்ஸ்டியூட் பிளேயர்” ரூல் பரிசீலனையில் இருக்கிறது என்ற செய்தி வெளியான நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த விதியை அறிமுகப்படுத்துவதாக வெளியிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

IPL 2023 - BCCI mulls introducing tactical substitutes

”டேக்டிகல் சப்ஸ்டியூட் பிளேயர்” விதியன் முக்கிய அம்சம்!

”டேக்டிகல் சப்ஸ்டியூட் பிளேயர்” விதியின் படி போட்டி தொடங்குவதற்கு முன்பாக 4 வீரர்களின் பெயர்களை மாற்றுவீரர்களாக அறிமுகப்படுத்தப்படுவர். பின்னர் அணியில் மாற்றுவீரர் தேவைப்படுவதாக அணி விரும்பினால், போட்டியின் 14ஆவது ஓவருக்குள் மாற்றுவீரரை ஆடும் 11 பேரில் எந்த வீரருக்கு மாற்றாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு மாற்றுவீரர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒருவேளை மாற்றுவீரர் பந்துவீச்சாளராக இருந்தால் வெளியேற்றப்பட்டவர் வீசக்கூடிய ஓவரை மட்டும் தான் வீசமுடியும்.

இந்த விதியானது பாஸ்கட் பால், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் மாற்றுபெயர்களில் காணப்படும் விதிகளைப்போன்று தான். கிரிக்கெட் வடிவத்தில் இந்தியாவில் சையத் முஸ்டாக் அலி கோப்பையில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவின் பிக்பேஸ் தொடரில் ”எக்ஸ் ஃபேக்டர்” ரூலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

image

இந்த புதிய விதியானது போட்டியின் முக்கியமான இடத்தில் போட்டியையே மாற்றும் விதத்தில் இருக்கும் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்