Published : 24,Sep 2017 12:16 PM

ஐநா சபை முன்பு நீட் தேர்வுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்

protest-against-neet-in-front-of-UN-in-america

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐநா பொதுசபை கூட்டத்தின் போது, தமிழர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

நியூயார்க்கில் ஐநா பொதுசபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உரையாற்ற இருந்த நேரத்தில், அரங்கத்திற்கு வெளிப்பகுதியில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் அமெரிக்க வாழ் தமிழர்கள்  முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்ககோரி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தினர். அப்போது மத்திய அரசால் தமிழர்கள் நசுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள் இது விவாதிக்கப்பட வேண்டிய காலம் எனவும் கூறினர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்