Published : 01,Dec 2022 10:04 PM

திருடிய சிசிடிவி வீடியோ வெளியானதால் சைக்கிளை எடுத்த இடத்திலேயே விட்ட திருடன்!

CCTV-video-of-bicycle-theft-was-released--the-thief-left-the-place-where-he-took-it-

சைக்கிள் திருடிய சிசிடிவி காட்சி மற்றும் ஊடகங்களில் செய்தி வைரல் ஆனதால், திருடிய சைக்கிளை அதே இடத்தில் மீண்டும் விட்டுள்ளார் திருடிய நபர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நந்தனார் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (50), திருவள்ளுவர் சாலையில் செருப்பு கடை வைத்து உள்ளார். கடந்த மாதம் 28ம் தேதி கடையில் இருந்து வீட்டிற்க்கு சாப்பிட சைக்கிளில் சென்றார். வீட்டின் வாசலில் சைக்கிளை நிறுத்தி சென்ற அவர் திரும்பி வந்து பார்த்த போது சைக்கிள் மாயமாகி இருந்தது. அருகில் இருந்த 'சிசிடிவி' காட்சிகளை பார்த்தபோது இளைஞர் ஒருவர், நோட்டமிட்டு சைக்கிளை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

image

இந்நிலையில், திருடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து, சைக்கிளை திருடிய நபர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், சைக்கிளை திருடிச் சென்ற அதே இடத்தில் மீண்டும் கொண்டு வந்து நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்