[X] Close

மதுக்கடைக்கு எதிராக சென்னையில் போராட்டம்

Protest-against-tasmac-in-chennai

சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் திறக்கப்பட்டுள்ள மது கடையை மூடக்கோரி சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement

சென்னை அண்ணா நகர் மேற்கு பாடிக்குப்பம் சாலையில் கடந்த நான்கு மாதங்களாக மூடி கிடந்த மதுபானக் கடை தற்போது ஒருவார காலமாக மீண்டும் செயல்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகுவதாக புகார் தெரிவிக்கும் அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் மதுபானக் கடையை மூடுவதோடு அந்தப் பகுதியில் இருந்தே மதுபானக் கடையை முற்றிலும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மதுக்கடையால் பல்வேறு இடையூறு ஏற்படுவதாக அப்பகுதி பெண்கள் குற்றம்சாட்டும் நிலையில், மதுக்கடையை மூடக்கோரி சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த இடத்தில் 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close