காதிப்பொருட்களை வாங்குங்கள்: மோடி வானொலி உரை

காதிப்பொருட்களை வாங்குங்கள்: மோடி வானொலி உரை
காதிப்பொருட்களை வாங்குங்கள்: மோடி வானொலி உரை

காந்தி ஜெயந்தியன்று காதிப் பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களை பிரதமர் நரேரந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

மனதில் உள்ளதைப் பேசுகிறேன் என்ற வானொலி உரையில் பேசிய பிரதமர் மோடி, காந்தி ஜெயந்தியன்று காதிப் பொருட்களை வாங்குங்கள், இதன் மூலம் ஏழைகளின் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும். தூய்மை இந்தியா இயக்கத்திற்கு பெருகி வரும் ஆதரவையும், அதில் மக்கள் ஆக்கப்பூர்வ பங்களிப்பை செலுத்தி வருவதையும் காண பெருமையாக உள்ளது.

இந்த வானொலி உரை மூலம், சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுடனும் ஒன்றிணைய முடிகிறது, அதிலிருந்து கிடைக்கப் பெற்ற கருத்துகள் அரசிற்கு உதவியுள்ளது. பன்முகத்தன்மை என்ற இந்தியாவின் தனித்துவத்தை இளைஞர்கள் அனுபவித்தால், அதிலிருந்து எண்ணற்ற விசயங்களைக் கற்க முடியும் என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com