[X] Close

செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளில் நடைபெற்ற சோதனை முடிந்தது

Income-tax-raid-at-senthil-balaji-relation-house-completed

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள், உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறையினர் ஆய்வு நிறைவு பெற்றது. இதில் 100 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement

டிடிவி தினகரன் ஆதரவாளர்களில் முக்கியமானவரான செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, அந்தத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நான்கு கோடியே 25 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் உறவினர், நண்பர்கள் வீடுகளில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை 4-ஆது நாளான இன்று நிறைவுபெற்றது. இதில் செந்தில்பாலாஜியின் நண்பர் சுவாமிநாதன் என்பவரது ஜவுளி உற்பத்தி ஆலையில் நடைபெற்ற சோதனையில் 2 சூட்கேஸ்களில் ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டன.

மேலும் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற சோதனையில் 100 கோடி ரூபாய் வருமான வரிஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக‌ கூறப்படுகிறது. மேலும், பினாபி பெயர்களில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் வாங்கப்பட்டதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் விவரங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் தெரியவரும் என வருமானவரித்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close