Published : 30,Nov 2022 11:10 AM
"நீங்கள் யாராக இருந்தாலும்... யாரை விரும்பினாலும் சரி! அன்பு அன்புதான்"- ஜோ பைடன்

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கான அங்கீகாரத்தை உறுதி செய்யும், `அமெரிக்க செனட் சபை மசோதா’வை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவில் 2015ல் நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்யக்கூடும் என்ற தகவல் பரவி வந்தது.
முன்னதாக அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தன்பாலின திருமண அங்கீகாரத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற அச்சம் நிலவியது. இதனைத் தவிர்க்கும் வகையில் கடந்த ஜூன் மாதம், அமெரிக்க பிரதிநிதிகள் சபை, தன்பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு கூட்டாட்சிப் பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியது.
இதனை தொடர்ந்து, செனட் சபையிலும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், இனிமேல் ஒரு மாகாணத்தில் தன்பாலின திருமணம் செய்து கொண்டவர்கள் திருமணங்களை நாட்டின் பிற மாகாணங்களிலும் செல்லுபடியாகும். விரைவில் ஒப்புதல் கையெழுத்து பெற ஜனாதிபதி பைடனுக்கு அனுப்பப்படும் எனவும் ஜனவரியில் குடியரசுக் கட்சியினர் ஹவுஸைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பு மசோதாவை நிறைவேற்றுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டம் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணம் உரிமையை பாதுக்கும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது LGBTQ சமூகத்தினரியிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. சுமார் 568,000 திருமணமான ஓரினச்சேர்க்கை தம்பதிகள் அமெரிக்காவில் வாழ்கின்றனர் என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மசோதாவானது 1996ல் கொண்டு வரப்பட்ட பழைய திருமண பாதுகாப்பு சட்டமான ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தை மட்டும் வரையறுக்கும் சட்டத்தை ரத்து செய்கிறது. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிகளிலிருந்து வரவேற்புகள் இருக்கிறது. இருந்தாலும்கூட, அமெரிக்காவில் இப்போதும் பல மாகாணங்களில் ஓரின சேர்கையாளர்களின் திருமணம் தடை செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது. இது வரும் நாள்களில் மாறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து செனட் வெளியிட்ட செய்தியில், ’’சமத்துவத்தை நோக்கிய நீண்ட கால மற்றும் தவிர்க்க முடியாத பயணம் இது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம், செனட் ஒவ்வொரு அமெரிக்கரும் கேட்க வேண்டிய ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறது. நீங்கள் யாராக இருந்தாலும் சரி அல்லது நீங்கள் யாரை விரும்பினாலும் சரி, நீங்களும் சட்டத்தின் கீழ் கண்ணியத்திற்கும் சமமான மரியாதைக்கும் தகுதியானவர்’’ என்றுள்ளது.
Today's bipartisan Senate passage of the Respect for Marriage Act proves our nation is on the brink of reaffirming a fundamental truth: love is love.
— President Biden (@POTUS) November 30, 2022
I look forward to the House passing this legislation and sending it to my desk, where I will proudly sign it into law.
சுமார் 5,68,000 திருமணமான ஓரினச்சேர்க்கை தம்பதிகள் அமெரிக்காவில் வாழ்கின்றனர் என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டரில், "செனட் சபையில் திருமணங்களுக்கு மரியாதை சட்டம் நிறைவேறியுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா ஒரு அடிப்படை உண்மையை நிலைநிறுத்தியுள்ளது. அன்பு அன்புதான்” என்றுள்ளார். செனட் சபையில் இந்த சட்டத்திற்கு 61 பேர் ஆதரவாகவும் 36 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இந்த சட்ட மசோதா பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. அங்கே ஒப்புதல் பெற்று மசோதா பைடன் கையெழுத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
இதையும் படியுங்கள் - ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு சட்டவிரோத மணல் கடத்தல்- 'புதிய தலைமுறை' கள ஆய்வில் அம்பலம்