Published : 28,Nov 2022 09:44 PM

வேலூர்: அமைச்சரை வரவேற்க பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கியதால் திமுக பிரமுகர் மரணம்!

Vellore--DMK-leader-died-due-to-electric-shock-while-making-a-banner-to-welcome-the-minister-

வேலூர் அருகே நடைபெற்ற திமுக கட்சிக்கூட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகனை வரவேற்க பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கியதில் திமுக பிரமுகர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பிகே.புரம் பகுதியில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் உட்பட எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

image

இதற்காக வடுங்கன்தாங்கள் பகுதியில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோரை வரவேற்று, வரவேற்பு விளம்பர பேனர்களை கட்டும் பணியில் வடுகந்தாங்கல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மார்கபந்து மற்றும் அவருக்கு உதவியாக ஒரு நபர் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள மின் கம்பம் அருகே பேனரை கட்ட உயர்த்தும் போது எதிர்பாராத விதமாக பேனரின் இரும்பு மீது மின்கம்பி பட்டு இருவரையும் மின்சாரம் தாக்கியது.

image

பின்னர் பலத்த படுகாயம் அடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலன் இன்றி முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் மார்கபந்து உயிரிழந்துள்ளார். மற்றோருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

image

இந்நிலையில் இது குறித்து கே.வி.குப்பம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.