
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ ஆதாரம் இருந்தால் உடனடியாக வெளியிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் இட்லி சாப்பிட்டார், இனிப்பு சாப்பிட்டார் என்று பொய் சொன்ன அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மதிப்பு மிக்க அமைச்சர்களாக இருந்து கொண்டு பொய் சொன்ன அனைவர் மீதும் நீதி விசாரணை நடத்தப்படும் வேண்டும் என்றும் அவர் சொன்னார்.