Published : 26,Nov 2022 03:12 PM
ரிலீஸ் தேதியை அறிவித்த கையோடு 2வது பாடலை வெளியிடும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படக்குழு

நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தினி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்து படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நீண்ட காலங்களுக்குப் பிறகு நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்றப் படத்தில் கம்பேக் கொடுக்கும் வகையில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, இயக்குநர் சுராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘அப்பத்தா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலை நடிகர் வடிவேலுவே பாடியிருந்தார்.
இந்நிலையில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் வருகிற டிசம்பர் மாதம் 9-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக இந்தப் படத்தை தயாரித்திருந்த லைகா புரொடக்ஷன்ஸ் நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் ‘பணக்காரன்’ என்ற இரண்டாவது பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இந்தப் பாடலை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனே பாடி, இசையமைத்துள்ளார்.