Published : 26,Nov 2022 10:29 AM
ஈரோடு: சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக அம்மாவட்ட குழந்தை நல அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்டவிரோதமாக திருமணம் செய்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மகளிர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 13 வயது சிறுமியை இளைஞர் பாரதி என்பவர் திருமணம் செய்து கொண்டு தனது தாத்தா வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக பாரதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஈரோடு சிறையில் அடைத்தனர்.