[X] Close

பா.ஜ.க செயற்குழு இன்று தொடங்குகிறது

BJP-excutive-meeting-today

பாரதிய ஜனதாவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்க உள்ளது. 2 நாட்கள் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் பாரதிய ஜனதாவின் 337 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆயிரத்து 400 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர். கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்கும் இக்கூட்டத்தின் இறுதியில் பிரதமர் மோடி நிறைவுரை ஆற்ற உள்ளார். 

ஏழைகள் நலத்திட்டங்கள், பொருளாதார வளர்ச்சி, ஜிஎஸ்டி, ரோஹிங்யா முஸ்லிம் பிரச்னை உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது
 


Advertisement

Advertisement
[X] Close