Published : 23,Nov 2022 07:27 AM

தோல்வி அதிர்ச்சியில் அர்ஜென்டினா... சவுதி அரேபியாவில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Saudi-Arabia-Fans-Celebration-after-the-victory-in-FIFA-World-cup-Qatar-2022-match

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற சவுதி அரோபிய அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வியை தழுவியது.

உலக கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ள கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற அர்ஜென்டினா சவுதி அரேபியா அணிகளுக்கு இடையேயான போட்டி அர்ஜென்டினா ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மொத்தம் 4 போட்டிகள் நடைபெற்றது. இதில், நேற்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும் சவுதி அரேபியா அணியும் பலப்பரீட்சை நடத்தியது, இதில், போட்டியின் ஆரம்பம் முதலே மிகவும் சிறப்பாக விளையாண்ட அர்ஜென்டினா அணி, ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் கிடைத்த பெனல்டி சூட்அவுட் வாய்ப்பை அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோலாக்கி கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். இதன்மூலம் முதல்பாதி ஆட்டத்தில் 1 : 0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னலை பெற்றது.

image

இதையடுத்து முதல்பாதியில் முன்னிலை பெற்றிருந்த அர்ஜென்டினா அணிக்கு ஆட்டத்தின் 48 வது நிமிடத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. சவுதி அரேபிய வீரர் அல்-ஷெஹ்ரி தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக்கி ஆட்டத்தை சமன் செய்தார். இதைத் தொடர்ந்து போட்டியின் 53 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆம், சவுதி அரேபிய வீரர் அல்-தவ்சாரி மேலும் ஒரு கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கை 2ஆக உயர்த்தினர். இதையடுத்து எவ்வளவோ போராடியும் அர்ஜென்டினா அணியால் கோல் அடிக்க முடியவில்லை, முடிவில் சவுதி அரேபியா அணி 2 : 1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வென்று கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

image

இதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள டென்மார்க் அணியும் டுனீசியா அணியும் களம்கண்டன. இதில், ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள மெக்சிகோ போலந்து அணிகள் மோதின. இதில், ஆட்டம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்காததால் போட்டி சமனில் முடிந்தது.

image

நள்ளிரவு 12.30 தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியும் ஆஸ்திரேலியா அணியும் விiளாயடியது. இதில், பிரான்ஸ் அணி 4 : 1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வென்றது. ஆஸ்திரேலியா அணி வீரர் குட்வின், ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் தனது அணிக்கு ஒரு கோல் அடித்து முன்னிலை படுத்தினார். அதேபோல் பிரான்ஸ் வீரர் ராபியோட் ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். இந்நிலையில், ஆட்டத்தின் 32 மற்றும் 71 வது நிமிடங்களில் ஜிரவுட் இரண்டு கோல்களும், ஆட்டத்தில் 68 வது நிமிடத்தில் எம்பாபி ஒரு கோல் அடித்ததை அடுத்து 4 : 1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்