Published : 22,Nov 2022 10:49 PM

முதல் போட்டியிலே அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா! ஏமாந்த ரசிகர்கள்!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி, தமது முதல் போட்டியிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தது.

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சவுதி அரேபியா அணியுடன் அர்ஜென்டினா அணி மோதியது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். இதன்மூலம், அந்த அணி முன்னிலை பெற்றிருந்தது. ஆனால், இரண்டாவது பாதி ஆட்டத்தில் சவுதி அரேபியா அணியின் அல்ஷெக்ரி, அல் தவ்சாரி ஆகியோர் சீரான இடைவெளியில் கோல்களை அடித்தனர்.

image

இதனால் ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினாவை 1 - 2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அணி வீழ்த்தியது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்