ஸ்மார்ட் கார்டுக்கு 1000 ரூபாய் லஞ்சம்

ஸ்மார்ட் கார்டுக்கு 1000 ரூபாய் லஞ்சம்
ஸ்மார்ட் கார்டுக்கு 1000 ரூபாய் லஞ்சம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்க லஞ்சம் கேட்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அந்த அலுவலகத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியர், 500  முதல் 1000 ரூபாய் வரை கொடுத்தால் மட்டுமே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் எனக் கூறுவதாக புகார் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைக்கு பதிலாக தற்போது ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட் கார்டு வழங்கும் பிரிவில் சுகுணா என்ற பெண் ஊழியர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஸ்மார்ட் கார்டு வாங்க வரும் நபர்களிடம் 500 முதல் 1000 வரை கட்டாயம் பணம் கொடுத்தால் மட்டுமே ஸ்மார்கார்டு வழங்கப்படும் என கூறி லஞ்சத்தை பெற்றுக்கொண்டு வழங்கி வருகிறார். மேலும் பணம் தர மறுப்பவர்களிடம் குறுஞ்செய்தி அனுப்பாமல் புறக்கணித்து விடுகிறார். இவர் மீது இதுபோன்று லஞ்சம் பெறுவதாக ஏற்கனவே பல புகார்கள் வந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 

இது குறித்து சமூக ஆர்வலர் விஸ்வராஜ், ராசிபுரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து லஞ்ச தலைவிரித்து ஆடுகிறது. ஊழியர்கள் வாங்கும் லஞ்சத்தில் வட்டாச்சியர் முதல் அணைத்து அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது.  இதுபோன்ற செயலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com