[X] Close

ஜெயலலிதா கைரேகை வைத்தது எப்படி?: மு.க.ஸ்டாலின் கேள்வி

m-k-stalin-rise-the-question

ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கும் நிலையில், ஜெயலலிதா கைரேகை வைத்தாகச் சொல்லப்பட்டது குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 


Advertisement

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் பார்த்து பேசியதாக முன்பு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். அப்படி சொன்னது பொய். அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள் என்று இப்போது கூறியுள்ளார். 
இது சம்பந்தமாக தற்சமயம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அப்போது முன்று தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கும்  இனிமேல் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் இலாக்காவை கவனிக்க வலியுறுத்தி ஆளுநருக்கும் அறிவுரை வழங்க ஜெயலலிதா கையெழுத்து போட்டதும், கைரேகை வைத்ததும் எப்படி? என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மர்மங்கள் விலக உடனே சிபிஐ விசாரணை தேவை என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 


Advertisement

Advertisement
[X] Close