Published : 21,Nov 2022 12:50 PM

சிவகங்கை: மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

Sivagangai-Youth-who-was-catching-fish-drowned-in-Kanmai-and-tragically-lost-his-life

திருவாடானை அருகே கண்மாயில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சேர்வார்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த அழகப்பன், கருப்பையா, மாரியப்பன், செல்வா ஆகியோருடன் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கிளவண்டி கிராம கண்மாயில் இன்று காலை தூண்டில் போட்டு மீன் பிடிக்க வந்துள்ளனர்.

image

அப்போது ராஜா திடீரென ஆழமான பகுதியில் தண்ணீரில் தவறி விழுந்து மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ராஜாவை காணாத அவரது நண்பர்கள் தேடிய நிலையில், தூண்டில் கம்பு தண்ணீரில் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து தண்ணீருக்குள் இறங்கி தேடியுள்ளனர்.

image

அப்போது ராஜா இறந்து சடலமாக மிதந்ததைக் கண்டு காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார், சுமார் ஒரு மணிநேர தேடலுக்குப்பின் ராஜாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருவாடானை அரசு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக திருவாடானை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்