Published : 21,Nov 2022 11:28 AM

கடைசி டி20 போட்டியில் இருந்து கேன் வில்லியம்சன் திடீர் விலகல் - இதுதான் காரணமாம்..

Williamson-to-miss-third-T20I-to-attend-medical-appointment

நாளை நடைபெறும் கடைசி டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார்.

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

image

3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. தொடரை இழக்காமல் இருக்க நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை மருத்துவரை சந்திப்பதற்காக அப்பாயின்மென்ட் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவரது முழங்கை வலி பிரச்சினைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

image

ஆக்லாந்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3வது டி20 போட்டியில் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்